பன்னீருக்கு ஜெயலலிதா கொடுத்த சூட்கேஸ்: அதில் என்ன இருந்தது தெரியுமா?
சென்னை அடையாறில் அரசு குடியிருப்பில் இருந்து வீனஸ் காலனிக்கு குடிபெயரும் பன்னீர்செல்வம் தம்முடன் முக்கிய சொத்தாக ஜெயலலிதா அளித்த சூட்கேஸ் ஒன்றை மட்டுமே எடுத்துச் சென்றுள்ளாராம்.
சசிகலாவும் ஏற்பட்ட அதிகாரப்போட்டி காரணமாக தமது முதல்வர் பதவியை துறந்த பன்னீர்செல்வத்திற்கு நெருக்கடி தரும் வகையில், அவர் குடியிருந்து வந்த தென்பண்ணை வீட்டை காலி செய்ய எடப்பாடி அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து போயஸ் தோட்டத்தின் பின்பக்கம் அமைந்துள்ள வீனஸ் காலனியில் புதிதாக குடியேறியுள்ள பன்னீர்செலவம் தம்முடம் விலைமதிப்பற்ற பொருளாக ஜெயலலிதா அவருக்கு அளித்த சூட்கேஸ் ஒன்றை மட்டுமே குறித்த அரசு பங்களாவில் இருந்து எடுத்துச் சென்றுள்ளாராம்.
பன்னீர் செல்வத்தின் பழைய வீட்டில் இருந்து முக்கியமான ஆவணங்களாக பன்னீர் கருதும், பழைய புகைப்படங்கள், முதன் முதலில் முதல்வராக பதவியேற்ற புகைப்படம், பன்னீருக்கு ஜெயலலிதா அளித்த பட்ஜெட் சூட்கேஸ், ஸ்ரீ வில்லிபுத்தூர் செண்பகத் தோப்பில் இருக்கும் அவரது குலசாமியான பேச்சியம்மன் மற்றும் சிறு தெய்வங்கள் அடங்கிய புகைப்படங்கள் நான்கு,
ஜெயலைதா கையெழுத்தில் வந்த ஒரு சில கடிதங்கள் என ஒரு சில முக்கியமான ஆவணங்கள் என்று பன்னீர் செல்வம் கருதும் முக்கியமான சொத்துக்களாக கையோடு புதிய வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
பழைய வீட்டில் இருந்த பர்னிச்சர் உள்பட ஒரு சில பொருட்களை அவர் எடுத்துச் செல்லவில்லையாம். பன்னீருக்கு பிடித்த பொருட்களை மட்டும் எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.