பனி வந்து கொண்டிருக்கின்றது.அனைத்தும் ஒரு முடிவிற்கு வருகின்றது.
இந்த வார இறுதியை மகிழ்ச்சியாக கழிக்கவும் ஏனெனில் இக்கால கட்டத்திற்கு புறம்பான வெப்பமான சூடான வெப்பநிலை மற்றும் பச்சை புல் போன்றவற்றை இறுதியாக காணும் அரிய வாய்ப்பு இதுவாக அமையும் என கனடா சுற்று சூழல் அறிவிக்கின்றது.
இம்மாதத்தில் வழக்கத்திற்கும் மாறான வெப்பநிலை காணப்படுவது சனிக்கிழமை-14-செல்சியஸ் கணிப்புடன்வெப்பமான வானின்- தான் இறுதி நாளாக இருக்கும்.
ஞாயிற்றுகிழமை காலநிலை தயாரிப்பாளராக பனி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் மொன்றியல் பிராந்தியத்தின் வெளிப் பகுதிகள் கியுபெக் சிற்றி மற்றும் கிழக்கு தன்னாட்சி பகுதிகளில் குறிப்பிடத்தக்க பனி குவிப்பு ஏற்படலாம். குறைந்தது 10-சென்ரி மீற்றர்கள் அளவிலான பனிபொழிவு எதிர்பார்க்கப்படுகின்றது.
மாகாணத்தின் சில பகுதிகளில்- விசேடமாக குளிர்கால ரயர்கள் இல்லாத வாகனங்கள்-வாகன பயணங்கள் கடின மானவைகளாக இருக்கும் என சுற்று சூழல் கனடா விசேட அறிக்கை விடுத்துள்ளது. பனி மற்றும் சகதிகளால் வீதிகள் திங்கள்கிழமை பணிகளிற்கு செல்லும் போக்குவரத்து வழக்கத்திற்கு மாறானதாக அமையும். வெப்பநிலையும் பூச்சியம் அல்லது 1ஆக காணப்படும்.
நவம்பர் மாதத்தின் எஞ்சிய காலப்பகுதி இதுவரை காணப்பட்டதைவிட குளிர் மிகுந்து காணப்படும். வெப்பநிலை குறைந்த ஒற்றை இலக்கங்களை கொண்டிருக்கும்.