Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பத்திரிகை, ஊடகவியலாளர்களுக்கு 4 இலட்சம் டொலர் வழங்க ட்ரம்புக்கு உத்தரவு

January 15, 2024
in News, World, முக்கிய செய்திகள்
0
பத்திரிகை, ஊடகவியலாளர்களுக்கு 4 இலட்சம் டொலர் வழங்க ட்ரம்புக்கு உத்தரவு

நியூயோர்க் ரைம்ஸ் பத்­தி­ரி­கைக்கும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் சில­ருக்கும் அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் சுமார் 400,000 அமெ­ரிக்க டொலர்­களை வழக்குச் செலவுத் தொகை­யாக வழங்க வேண்டும் என அந்­நாட்டு நீதி­மன்­ற­மொன்று உத்­த­ர­விட்­டுள்­ளது.

டொனால்ட் ட்ரம்பின் சொத்து விப­ரங்கள், வரி ஏய்ப்பு முயற்­சிகள் தொடர்­பாக, 2018 ஆம் ஆண்டு நியூ­யோர்க் ரைம்ஸில் வெளி­யி­டப்­பட்ட புல­னாய்வுக் கட்­டு­ரைக்கு புலிட்ஸர் விருது வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

அக்­கட்­டு­ரைக்­காக தனது வரி விப­ரங்கள் அடங்­கிய ஆவ­ணங்­களை சட்­ட­வி­ரோ­த­மான முறையில் பெற்­றுக்­கொண்­ட­தாக மேற்­படி பத்­தி­ரிகை மீதும், 3 ஊட­வி­ய­லா­ளர்கள் மீதும் குற்றம் சுமத்­திய டொனால்ட் ட்ரம்ப் 100 மில்­லியன் டொலர் இழப்­பீடு கோரி 2021 ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தார்.

ட்ரம்பின் உற­வி­ன­ராக மேரி ட்ரம்ப்பும், டொனால்ட் ட்ரம்­பினால் குற்றம் சுமத்­தப்­பட்­ட­வர்­களில் ஒருவர்.

இவ்­வ­ழக்கை நியூயோர்க் மாநில உயர் நீதி­மன்றம் கடந்த மே மாதம் தள்­ளு­படி செய்­தி­ருந்­தது.

இந்­நி­லையில், மேற்­படி வழக்­குக்­கான செலவுத் தொகை­­யாக நியூயோர்க் ரைம்ஸ் பத்­தி­ரிகை மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மூவ­ருக்கு 392, 638 அமெ­ரிக்க டொலர்­களை (சுமார் 12.5 கோடி இலங்கை ரூபா) டொனால்ட் ட்ரம்ப் வழங்க வேண்டும் என நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (12) உத்தரவிட்டுள்ளது.

Previous Post

மனித உரிமை விவகாரங்களில் இரட்டை வேடம்போடும் உலக தலைவர்கள் | பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களிற்கு ஆபத்து | சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

Next Post

100 ஆவது நாளாகத் தொடரும் இஸ்ரேல் | ஹமாஸ் யுத்தம்

Next Post
100 ஆவது நாளாகத் தொடரும் இஸ்ரேல் | ஹமாஸ் யுத்தம்

100 ஆவது நாளாகத் தொடரும் இஸ்ரேல் | ஹமாஸ் யுத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures