Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பதவிகளுக்காக சுமந்திரனுடன் நிற்கும் தமிழரசுக்கட்சியினர்: கே.வி.தவராசா சீற்றம்

October 22, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தனிப்பட்ட நபரின் தனியார் நிறுவனமே தமிழரசுக்கட்சி : தவராசா ஆதங்கம்

தமிழரசுக் கட்சிக்குள் இருந்த ஒவ்வொருவரும் தமிழ் தேசியத்தை விடுத்து ஒவ்வொரு பதவிகளுக்கான ஆசைகளில் இருந்தார்கள் என ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா (K.v. Thavarasha) தெரிவித்துள்ளார்.

இன்று கட்சிக்குள் இருந்த அனைவரையும் விலக்கிவிட்டு தனிநபர் ஒருவர் தனது தனியான கட்டுக்கோப்புக்குள் கட்சியை வைத்திருக்கின்றார் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

வலிகாமம் மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் நேற்று (20) நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், ”ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு எனும் பெயரில் ஒரு கட்சியை உருவாக்கி நாங்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வர வேண்டிய சூழ்நிலையை  இலங்கை தமிழரசுக் கட்சி ஏற்படுத்தியிருக்கின்றது. நாங்கள் விரும்பி வெளியில் வரவில்லை.

பதவிகளுக்காக சுமந்திரனுடன் நிற்கும் தமிழரசுக்கட்சியினர்: கே.வி.தவராசா சீற்றம் | Ilankai Tamil Arasu Kachchi Issue K V Thavarasha

16 ஆண்டுகள் தமிழரசுக் கட்சியின் உள்ளே இருந்தேன். இதன்போது மத்திய குழு, அரசியல் குழு மற்றும் சட்டக் குழுவின் பல குழுக்களில் இருந்தேன். கட்சிக்கு வரும் வழக்குகளுக்கும் நான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தேன்.

அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது வழக்குகளில் இருந்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட, அரசியல் கைதிகளின் வழக்குகளில் நான் முன்னிலையாகி உள்ளேன். வாதாடிய வழக்குகளில் எவருமே சிறை செல்லவில்லை.

இலங்கை தமிழரசுக் கட்சியானது தற்போது ஒரு தனி நபருடைய கம்பனியாக மாறி இருக்கின்றது. அந்த நபர் இவ்வாறு சர்வதிகாரம் மிக்க நிலையில் செயற்படுவதற்காக தலைமைத்துவமும், சம்பந்தரும் (R. Sampanthan) காரணமாக உள்ளனர்.

கட்சியின் தலைவர் தேர்தலில் வெற்றி 

கட்சிக்குள் இருந்த அனைவரையும் விலக்கிவிட்டு தனது தனியான கட்டுக்கோப்புக்குள் கட்சியை வைத்திருக்கின்றார். கட்சியின் தலைவர் தேர்தலில் சிறீதரன் (S. Shritharan) வெற்றி பெற்றிருந்தார். இருந்தாலும் அவருக்கான பதவி வழங்கப்படாது, நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்றது.

பதவிகளுக்காக சுமந்திரனுடன் நிற்கும் தமிழரசுக்கட்சியினர்: கே.வி.தவராசா சீற்றம் | Ilankai Tamil Arasu Kachchi Issue K V Thavarasha

தமிழ் தேசியம் தான் எமது தமிழரசுக் கட்சியின் தாரகை மந்திரம். தமிழ் தேசியமானது பாதுகாக்கப்பட வேண்டும். நாங்கள் இல்லாவிட்டாலும் கூட அடுத்த தலைமுறையிடம் அதனை ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும். ஆனால் தமிழரசுக் கட்சிக்குள் அது நடைபெறவில்லை.

கட்சிக்குள் இத்தனை பேர் இருந்தும் ஏன் எதனையும் செய்யவில்லை என நீங்கள் கேட்க கூடும். கட்சிக்குள் இருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதவிகளுக்கான ஆசைகளில் இருந்தார்கள்.

பதவி விலகிய தலைவர் 

மாகாண சபை தேர்தல் வந்தால் அந்த தேர்தலில் முதலமைச்சர் யார், அமைச்சர்கள் யார், பிரதேச சபை தேர்தல்களில் போட்டியிடுபவர்கள் யார் என அவர்களுக்கு பதவி வழங்கப்பட்டு விட்ட நிலையில் அவர்கள் அனைவரும் அமைதியாகி விட்டார்கள்.

பதவிகளுக்காக சுமந்திரனுடன் நிற்கும் தமிழரசுக்கட்சியினர்: கே.வி.தவராசா சீற்றம் | Ilankai Tamil Arasu Kachchi Issue K V Thavarasha

இவ்வாறான சூழ்நிலையில் தான் கட்சியை நடத்த முடியாது என நான் வெளியேறி வந்தேன். நான் ஆறாம் திகதி கட்சியை விட்டு வெளியேறி வந்த பின்னர் ஏன் கட்சியை விட்டு வெளியேறினீர்கள், கட்சிக்கு உள்ளே இருந்து சரி செய்திருக்கலாம் தானே என்று பலர் என்னிடம் கேட்டார்கள்.

எட்டாம் திகதி தலைவர், தான் வகித்த சகல பதவிகளிலும் இருந்து விகுகின்றார். இது ஒருவருடைய சர்வாதிகாரப் போக்கை காட்டுகின்றது.

கட்சியின் செயலாளர் பதவியினை சுமந்திரன் (M. A. Sumanthiran) கோரினார். ஆனால் அவருக்கான பதவி மறுக்கப்பட்டது. இதன்போது சுமந்திரன் நாங்கள் இரண்டு அணி என கூறினார். இப்போது தேர்தல் வரும் போது நாங்கள் ஒரு அணி என கூறுகின்றார். வீட்டுக்குள் என்ன நடக்கின்றது” என தெரிவித்தார்.

Previous Post

மணிப்பூரில்மீண்டும் வெடித்த வன்முறை… கிராமத்தில் தாக்குதல் நடத்திய குகி ஆயுதக்குழுவினர்!

Next Post

பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு – ஜனாதிபதி அநுர அறிவிப்பு

Next Post
விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு - ஜனாதிபதி அநுர அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures