Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

படையினர் மூலம் போராட்டக்காரர்களை அடக்க அவரசகால வழிகாட்டல்கள் பயன்படுத்தப்படக்கூடாது | HRW

July 17, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறுபான்மையினரை ஒடுக்குவதிலேயே ராஜபக்ஷ அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது | மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையில் கடந்த 13 ஆம் திகதி அவரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் பின்னணியில் பாதுகப்புத்தரப்பினரும் அரசாங்கமும் போராட்டக்காரர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவேண்டியது அவசியமாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. 

நாட்டில் கடந்த சில மாதங்களாகத் தொடரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை அடுத்து தோற்றம்பெற்ற மக்களின் தன்னெழுச்சிப்போராட்டங்களின் விளைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேறியதுடன், அவரது பதவியிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளார். 

அதனையடுத்து பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க, கடந்த புதன்கிழமை நாட்டில் அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தினார்.

நாட்டின் இந்நிலைவரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

பதில் ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலநிலையின் ஊடாகப் பாதுகாப்புத்தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்கள் குறித்த விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. 

ஏனெனில் சர்வதேச சட்டமானது அவசரகாலநிலை அமுலில் உள்ளபோது சில உரிமைகளுக்கு விலக்களிப்பதால் சித்திரவதைகளிலிருந்து பாதுகாப்புப்பெறல், மிகையான அளவில் படையினரைப் பயன்படுத்தல் மற்றும் ஏனைய சில உரிமைகள் மீறப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

ஆகவே அவசரகால வழிகாட்டல்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புப்போராட்டங்களை முடக்குவதற்கோ அல்லது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மிகையான பாதுகாப்புப்படையினரை பணியில் ஈடுபடுத்துவதற்கோ பயன்படுத்தப்படக்கூடாது. 

கடந்த காலங்களில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால வழிகாட்டல்களின் ஊடாக அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை அடக்குவதற்கு மிகையான அளவில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டார்கள் என்ற கரிசனைகளைத் தோற்றுவித்திருந்தது.

எனவே சிவில் மக்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளுக்கு அமைவாகவே இராணுவத்தினர் செயற்படவேண்டும் என்பதுடன், ஒட்டுமொத்த பாதுகாப்புத்தரப்பினரும் அடிப்படை மனித உரிமைகளுக்கு அமைவாகச் செயற்படவேண்டியது அவசியமாகும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Previous Post

சிங்கப்பூரில் கோத்தபாயவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் | ஒருவர் மாத்திரம் கலந்துகொண்டார் 

Next Post

ஜனாதிபதி தெரிவில் ரணிலை ஆதரிக்க பொதுஜன பெரமுன தீர்மானிக்கவில்லை | அலிசப்ரி

Next Post
கோட்டாபயவுக்காக ரணில் போடும் டொனமூர் அரசியலமைப்பு முடிச்சு

ஜனாதிபதி தெரிவில் ரணிலை ஆதரிக்க பொதுஜன பெரமுன தீர்மானிக்கவில்லை | அலிசப்ரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures