ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த பி.வி.சிந்துவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது.
ஹைதராபாத்தில் பிறந்த பி.வி.சிந்து, 8 வயதில் பேட்மிண்டன் விளையாட ஆரம்பித்தார்.
தொடர்ந்து பயிற்சியாளர் கோபிசந்தின் சீரான உத்வேகத்தால் விளையாடி கடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தார்.
இந்நிலையில் இவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கவுள்ளார் பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான சோனு சூட்.
லட்சக்கணக்கான இந்தியர்களை ஊக்கமடையச் செய்த பெண்ணின் கதையை படமாக எடுப்பதில் மகிழ்ச்சி அடைவதாக சோனு சூட் தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் நாயகியாக யார் நடிக்கவிருக்கிறார் என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.