படகு தீ விபத்தில் சிக்கி 23 பேர் பலி 33 பேர் படுகாயம் – இந்தோனேசியாவில் சம்பவம்

படகு தீ விபத்தில் சிக்கி 23 பேர் பலி 33 பேர் படுகாயம் – இந்தோனேசியாவில் சம்பவம்

இந்தோனேசியாவில்  தீவு பகுதியை நோக்கி 240 இற்கும்  அதிகமான பயணிகளை  ஏற்றி சென்ற படகில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 23 பேர் உயிரிழந்ததுடன் 33 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தலைநகர் ஜகர்தாவின் வடபகுதியில் உள்ள முவாரே ஆங்கே துறைமுகத்தில் இருந்து இன்றுகாலை 240 இற்கும் அதிகமான பயணிகளை ஏற்றி சென்ற இயந்திரப் படகே விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்தப் படகு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இயந்திர பகுதியில் தீபற்றியுள்ளது , வேகமாக பரவிய தீயினால் 23 பேர் உயிரிழந்துள்ளனர், 33 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கடலோரக் காவல் படையினர் கடலில் நீந்தியபடி உயிருக்குப் போராடிய 100 இற்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டுள்ளனர். என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

படகானது தற்காப்பு அணிகளை குறைவாக கொண்டிருந்ததோடு, அனுமதித்த அளவை விட இருமடங்கு பயணிகளை ஏற்றிச்சென்றமையே விபத்தின் போது அதிகமானவர்கள் இறப்பதற்கு காரணமாகும். என அந்நாட்டு கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

Security forces, Red Cross and rescue workers carry body bags with the remains of victims from a boat fire at Muara  Angke port in Jakarta, Indonesia

Police, Red Cross and rescue workers remove the remains of victims after a fire ripped through a boat carrying tourists to islands north of the capital at Muara  Angke port  in Jakarta, Indonesia

Police, Red Cross and rescue workers search for victims after a fire ripped through a boat carrying tourists to islands north of the capital at Muara Angke port in Jakarta

Police and rescue workers search a boat for victims at Muara Angke port in Jakarta, Indonesia

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *