ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அரசியல் ரீதியான இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயன்று வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு அரசியல் ரீதியில் ஆதரவு வழங்குவதற்காக மஹிந்த ராஜபக்ச ஒப்பந்தம் ஒன்றை முன்வைத்துள்ளார்.
நிபந்தனையுடன் ஆதரவு வழங்குவதாக மஹிந்த தனது அறிக்கையின் ஊடாக தெரிவித்துள்ளார்.
மனைவியான ஷிரந்தி ராஜபக்ச, பிள்ளைகளான நாமல் ராஜபக்ச, யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்சவுக்கு எதிராக உள்ள வழக்குகளை நீக்கிக் கொள்வது தொடர்பாக அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு நெருக்கமான பிரபல அமைச்சர் ஊடாக இந்த ஒப்பந்தம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும் ஜனாதிபதியால் அந்த ஒப்பந்தம் முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
மஹிந்தவின் கோரிக்கைகளுக்கு இணங்கினால் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக வழங்கிய பிரதான வாக்குறுதியதான ஊழல் மோசடிக்காரர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்பதனை நீக்கிக் கொள்ள நேரிடும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அது அரசாங்கத்தின் எதிர்கால அரசியல் பயணத்திற்கு நேரடியாக தாக்கம் செலுத்தும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.