ஹமில்ரன் பகுதியில் காலை 9.30மணியளவில் வன்முறையான வீட்டு ஆக்கிரமிப்பு நடந்துள்ளது. சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.மேலும் மூவரை பொலிசார் தேடுகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு இலக்கின் போது ஒருவர் சுடப்பட்டதாகவும் மற்றும் மூவர் காயமடைந்துள்ளதாவும் பொலிசார் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பாளர்கள் ஆயுதம் ஏந்தியிருந்தனர்.ந்த ஆக்கிரமிப்பில் துப்பாக்கிகள் பிரயோகிக்க பட்டதுடன் துப்பாக்கி சூடுகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
வீட்டிற்குள் இருந்தவர்கள் சந்தேக நபர்களால் காயமடைந்திருக்கலாம் அல்லது தாக்கப்பட்டிருக்கலாம் என அறியப்படுகின்றது.
சம்பவம் நடந்த சமயம் வீட்டிற்குள் ஐந்து பேர்கள் இருந்துள்ளனர்.
சந்தேக நபர்கள் வீட்டின் பின்புறமாக உள்ளே நுழைந்துள்ளனர்.அச்சமயம் பெண் ஒருவர் சோபாவில் படுத்திருந்ததாகவும் சந்கே நபர்கள் அவரை அடித்ததாகவும் தொடர்ந்து படிகளால் இறங்கி வந்த அவர்களது இளைய மகனை துப்பாக்கியால் தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
சத்தம் கேட்டு கீழே வந்த பெண்ணின் கணவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
சந்தேக நபர்களில் மூவர் ஓடி விட்டனர்.
சுடப்பட்ட ஆண் கடுமையான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைதியான பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றதால் அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.
சந்தேக நபர்கள் உபயோகித்த மோட்டார் சைக்கிள் அனாதரவாக விடப்பட்டநிலையில் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.