நெருக்கடியை எதிர்நோக்கும் இலங்கை! கால அவகாசம் வழங்க கோரும் பிரிட்டன்
இலங்கைக்கு தொடர்ந்தும் கால அவகாசம் வழங்க வேண்டுமென பிரிட்டன் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுலாக்க இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கி ஆதரவை கொடுக்கலாம் என ஐக்கிய இராஜ்யத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவல்களுக்கு பொறுப்பான அமைச்சர் ஆலோக் ஷர்மா கருத்துரைத்துள்ளார்.
இதேவேளை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் மனித உரிமைகள் பேரவையுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை கொண்டுள்ளதாக பாராட்டியுள்ளார்.
இம்முறை நடந்துவரும் 34வது கூட்டத் தொடரில் இலங்கை பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துவருகிறது. இந்நிலையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அங்கு தங்கியிருந்து இலங்கைக்கு ஏற்படவிருக்கும் பாதக நிலையை சமாளிக்க முழு வீ்ச்சோடு செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில், நாட்டில் நல்லிணக்கதை மேம்படுத்தவும், நல்லாட்சியில் விசாரணைகளை நாம் முன்னெடுக்க அரசாங்கம் கால அவகாசத்தை முன்னதாக கோரியிருந்தது. இந்நிலையிலேயே ஆலோக் ஷர்மா இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் அமைச்சர் மட்ட கூட்டத் தொடரில் அவர் ஐக்கிய இராஜ்யத்தில் அறிக்கையை வாசித்த நிலையில், பேரவையின் அமர்வுகள் நடைபெறும் ஜெனீவா நகரில் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.