நெடுஞ்சாலை 401 மேற்கின் ஒரு பகுதி விரிவாக்க திட்டம்!

ரொறொன்ரோவின் மேற்கு கனரக போக்குவரத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒன்ராறியோவின் பரபரப்பான நெடுஞ்சாலையை விரிவாக்க மாகாணம் திட்டமிட்டுள்ளது.
மாகாண அரசாங்கம் நெடுஞ்சாலை 401 மேற்கை மிசிசாகா கிரடிட் றிவர் மற்றும் மில்ரன் பிராந்திய சாலை 24-ற்கும் இடையில் 18கிலோ மீற்றர்கள் விரிவு படுத்தும் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
மாகாண போக்குவரத்து அமைச்சர் Steven Del Duca உள் ஊர் பாராளுமன்ற அங்கத்தவர்கள் மற்றும் பிரம்ரன் மேயர் ஆகியோருடன் இணைந்து திங்கள்கிழமை இதனை அறிவித்துள்ளார்.
தினந்தோறும் 108,000முதல் 188,000 வாகனங்கள் பீல் மற்றும் Halton ஊடாக தினமும் பயணிப்பதாக மாகாண அரசாங்கம் கணக்கிட்டுள்ளது.
மில்ரன் உட்பட்ட இப் பகுதிகள் நாட்டின் விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். கடந்த 10வருடங்களில் இப்பிரதேசத்தின் சனத்தொகை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.
இப்பகுதியில் வசிப்பவர்களும் வேலை செய்பவர்களும் 401 ஐ உபயோகிக்கின்றனர் என டெல் டுகா தெரிவித்தார்.
புதிய பாதைகள் மக்கள் மற்றும் பொருட்கள் இப்பகுதி ஊடாக வெளியேறுவதற்கு உதவும் என மிசிசாகா மேயர் பொன்னி குரொம்பி தெரிவித்தார்.

expexp1exp2exp3exp4exp5

841 total views, 204 views today

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News