நெடுஞ்சாலையில் தவறான-பாதை பொலிஸ் பின்தொடர்கை.
கனடா-ரொறொன்ரோ. ஸ்காபுரோவில் நெடுஞ்சாலை 401ல் தவறான- பாதை பொலிஸ் பின்தொடர்கை மோதலில் முடிவடைந்ததுடன் மனிதன் ஒருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் புதன்கிழமை இரவு நடந்துள்ளது.
இரவு 10மணிக்கு சிறிது முன்னராக போதையில் வாகனம் செலுத்தியதாக தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டது.
டர்ஹாம் பொலிசார் வான் ஒன்று நெடுஞ்சாலையில் மேற்கு நோக்கி கிழக்கு பாதையில் சென்று கொண்டிருந்த வாகனத்தை தொடர்ந்துள்ளனர்.
துரத்தல் புறொக் வீதி.பிக்கரிங்கில் ஆரம்பமாகியது. தொடர்ந்து கிட்டத்தட்ட 10கிலோ மீற்றர்கள் வரை ஸ்காபுரோவிற்குள் சென்று மெடொவேல் வீதியில் வெளியேற முயன்ற சமயம் மோதியுள்ளது.
வாகம் பீல் பிராந்தியத்தின் எப்பகுதியிலோ திருடப்பட்டதாக பீல் பொலிசார் தெரிவித்தனர்.
31வயதுடைய மனிதனொருவர் தற்சமயம் பொலிசாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக டர்ஹாம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எவரும் காயமடைந்ததாக அறிவிக்கப்படவில்லை.
விசாரனை தொடர்கின்றது.