Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நுண் நிதிக் கடன்களை வடக்கில் நிறுத்தவேண்டும்

October 7, 2017
in News, Politics
0
நுண் நிதிக் கடன்களை வடக்கில் நிறுத்தவேண்டும்

வடக்கு மாகா­ணத்­தில் நுண் கடன் வழங்­கல் செயற்­பா­டு­க­ளில் ஈடு­ப­டும் நிதி நிறு­வ­னங்­க­ளின் அனு­ம­தி­கள் நிறுத்­தப்­ப­ட­வேண்­டும் என மத்­திய வங்கி ஆளு­நர் இந்­தி­ர­ஜித் குமா­ர­சா­மி­யி­டம் யாழ்ப்­பாண மாவட்ட பொது அமைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­ கள் நேற்று நேரில் வலி­யு­றுத்­தி­னர்.
இலங்கை மத்­திய வங்கி ஆளு­நர் இந்­தி­ர­ஜித் குமா­ர­சாமி, வடக்­குக்கு இரண்டு நாள்­கள் பய­ண­மாக நேற்று யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தந்­தார்.
திரு­நெல்­வே­லி­யில் உள்ள திண்ணை ஹோட்­ட­லில் அவர் சிறப்­புக் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­னார். இதன்­போதே மேற்­படி கோரிக்கை முன்­வைக்­கப்பட்­டது.
யாழ்ப்­பா­ணம், மன்­னார் மாவட்­டச் செய­லா­ளர்­கள் மற்­றும் யாழ்ப்­பா­ணம் , கிளி­நொச்சி, மன்­னார் மாவட்ட அரச அதி­கா­ரி­கள் நேற்று காலை இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்­ற­னர்.
பொது அமைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் நேற்று மாலை இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்­ற­னர். மத்­திய வங்­கி­யின் கட்­டுப்­பாட்­டில் உள்ள நிதி நிறு­வ­னங்­க­ளால் வடக்­கில் ஏற்­ப­டும் நெருக்­க­டி­கள் தொடர்­பில் ஆரா­யப்­பட்­டது.
“வடக்கு மாகா­ணத்­தில் இயங்­கும் நிதி நிறு­வ­னங்­கள் நுண் கடன் என்ற பெய­ரில் மக்­க­ளுக்கு அதிக வட்­டிக்­குக் கடனை வழங்கி அதனை அற­வி­டு­வ­தற்­காக பெரும் நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்­து­கின்­ற­னர்.
சில நிறு­வ­னங்­கள் கடனை மீள அற­வீடு செய்­வ­தற்­காக வாடிக்­கை­யா­ள­ரின் வீட்­டுக்கு இர­வில் சென்று பெரும் தொல்லை கொடுக்­கின்­றன.
இத­னால் பல குடும்­பங்­கள் பிரி­வைச் சந்­தித்­துள்­ளன. சிலர் மன அழுத்­தத்­துக்கு உள்­ளாகி தவ­றான முடிவை எடுத்து உயி­ரைத் துறக்­க­வும் வழி வகுத்­துள்­ளது. இவ்­வா­றான நிதி நிறு­வ­னங்­க­ளின் அனு­ம­தி­களை உட­ன­டி­யாக நிறுத்த வேண்­டும்.
மேலும் பிர­மிட் வணி­கத்தை ஒத்த வியா­பா­ர­மும் வடக்­கில் மிகப் பெரிய அள­வில் இடம்­பெ­று­கின்­றது. கேட்­டால் அனு­மதி உண்டு என்­கின்­ற­னர். அத­னால் குறித்த வியா­பா­ரத்தை பொலி­ஸா­ரும் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில்லை” என்று பொது அமைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் மத்­திய வங்கி ஆளு­ந­ரி­டம் விளக்­க­மாக எடுத்­து­ரைத்­த­னர்.
“வடக்­கின் பொரு­ளா­தார மேம்­பாடு குறித்து அரசு கரி­ச­னை­யோடு உள்­ளது.போரின் பின்­பான அபி­வி­ருத்தி தொடர்­பில் அதிக கவ­னம் செலுத்­தி­யுள்­ளது.அந்­த­வ­கை­யிலே வடக்­கில் நிதி சார்ந்த செயற்­பா­டு­க­ளில் ஈடு­பட்டு வரு­கின்ற நிறு­வ­னங்­கள் தொடர்­பில் அதிக கவ­னம் செலுத்த வேண்­டி­யுள்­ளது.நிதி நிறு­வ­னங்­கள் மீது உடன் நட­வ­டிக்கை எடுப்­பது இந்­தப் பய­ணத்­தின் நோக்­கம் அல்ல. ஆனால் வடக்கு மக்­கள் மீதான கடன் சுமை அதி­க­ரித்­துள்­ளது. குறிப்­பாக, நுண் நிதி நிறு­வ­னங்­கள் மற்­றும் மக்­க­ளி­டை­யே­யான நிதிக் கொடுக்­கல் வாங்­கல் தொடர்­பில் பல விட­யங்­களை திட்­ட­மி­ட­லோடு முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ளது. அதற்கு அரச திணைக்­க­ளங்­க­ளின் அதி­க­பட்ச உதவி தேவை. மக்­க­ளுக்கு நிதி கையா­ளுகை தொடர்­பான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் செயற்­பா­டு­க­ளின் தேவைப்­பாடு உண­ரப்­பட்­டுள்­ளது. அது குறித்து அனை­வ­ரும் சிந்­திக்க வேண்­டும். மிர­மிட் வணி­கத்தை ஒத்த வகை­யில் இடம்­பெ­றும் வியா­பா­ரம் தொடர்­பில் உட­ன­டி­யா­கவே பொலி­ஸார் மூலம் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்” என்று மத்­திய வங்கி ஆளு­நர் இந்­தி­ர­ஜித் குமா­ர­சாமி தெரி­வித்­தார்.

Previous Post

இள­நீர் பறித்த சிறு­வர்­க­ளுக்கு மின்­சார வயர்­க­ளால் தாக்­கு­தல்- கிளிநொச்சியில் சம்பவம்

Next Post

சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் பேரணி

Next Post
சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் பேரணி

சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் பேரணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures