புகலிடம் தேடி பிரித்தானியா வந்துள்ள 17 வயது இளைஞர் மீது கும்பலொன்று நடத்தியுள்ள தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள பேருந்து நிலையத்தில் இரு தினங்களுக்கு முன்னர் ஈரான் நாட்டை சேர்ந்த 17 வயதான நபர் தன் இரு நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் அருகில் 8 பேர் கொண்ட ஒரு கும்பல் வந்தது, அவர்கள் அந்த இளைஞரிடம் நீ எந்த நாட்டை சேர்ந்தவன் என கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் நான் ஈரானிலிருந்து புகலிடம் தேடி இங்கு வந்துள்ளேன் என கூறியுள்ளார்.
இதை கேட்டு ஆத்திரமடைந்த கும்பல் அந்த நபரை சராமரியாக தாக்கினார்கள். தலையிலும், முகத்திலும் அவர்கள் நடத்திய தாக்குதலில் இளைஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இளைஞரின் இரு நண்பர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தற்போது படுகாயம் அடைந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
