நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் எட்டு நோயாளிகளை கொன்ற தாதி.

நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் எட்டு நோயாளிகளை கொன்ற தாதி.

care2 care3கனடா-வூட்ஸ்ரொக், ஒன்ராறியோவில் 49 வயதுடைய தாதி ஒருவர் இவரது கவனிப்பில் இருந்த நோயாளிகள் எட்டு பேர்களை கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.2014-ல் லண்டன் ஒன்ராறியோவில் Meadow Park Nursing Home ல் பணிபுரிந்துள்ளார்.
வெட்லுவர் என்ற பெயருடைய இவர் ஒன்ராறியோ செவிலியர் கல்லூரியின் தாதி அனுமதி பத்திரம் பெற்றவர் என கூறப்படுகின்றது. கடந்த செப்டம்பர் 30-ல் வேலையை ராஜிநாமா செய்ததன் பின்னர் பொலிசார் இவருக்கு எதிரான குழப்பமழிக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்து புலன்விசாரனையை ஆரம்பித்தனர்.
இவர் ஆழ்ந்த மதப்பற்றுடையவர் போல் தோற்ற மளித்ததுடன் வூட்ஸ்ரொக்கிலுள்ள சமய அமைப்புக்களுடன் இணைந்து உலகம் பூராகவும் “விதி விலக்கான தேவைகள்” உடையவர்களிற்கு 1996 முதல் 2007 வரை உதவிவந்துள்ளார்.
2007ல் Caressant Care Nursing and Retirement Homeல்  சேர்ந்தார்.அங்கு எட்டு நோயாளிகளில் ஏழு பேர்கள்கொல்லப்பட்டனர். அங்கு ஏழு வருடங்கள் பணிபுரிந்தார்.மரணங்களிற்கான சரியான விபரங்களை ஒன்ராறியோ மாகாண பொலிசார் தெரியப்படுத்தவில்லை.
ஆனால் வூட்ஸ்ரொக் மற்றும் லணடன் ஒன்ராறியோ. நேர்சிங் ஹோமில் இருந்த நோயாளிகளிற்கு 2007-ற்கும் 2014-ற்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு மருந்து கொடுக்கப்பட்டுள்ளதென தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கருத்துக்கள் எதனையும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *