தமிழ் சினிமாவில் 90களில் கதாநாயகிகளில் மிக பிரபலமாக திகலந்தவர் தேவயானி. ஒரு கட்டத்தில் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு தொடர்ந்து படங்களில் நடிப்பதை தவித்தார். தற்போது தனது குழந்தைகள் ஸ்கூல் போகும் நிலைமை வந்ததால் மீண்டும் நல்ல கதாபாத்திரம் அமைந்தால் நடிக்க ஒத்துக்கொள்கிறார். இந்நிலையில், தேவயானி தற்போது மலையாளத்தில் ‘மை ஸ்கூல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதில் அவருக்கு பள்ளிக்கூட ஆசிரியை வேடம். பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனை நாய் கடித்து விடுகிறது. அவனை காப்பாற்றுவதற்காக வகுப்பு ஆசிரியை போராடுவதே படத்தின் கதை. அடுத்து ஒரு தெலுங்கு படத்தில் இளம் ஹீரோவின் அக்காவாக தேவயானி நடிக்கிறார்.