தனிக்கட்சி தொடங்கும் ரஜினிகாந்த் தமது கட்சியின் பொதுச் செயலராக முன்னாள் மத்திய அமைச்சரான திமுகவின் ஜெகத்ரட்சகனை நியமிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தனிக்கட்சி தொடங்குவதில் உறுதியாக இருக்கும் ரஜினிகாந்த் இதற்காக அரசியலில் நடுநிலையோடு செயல்படும் தமிழகத்தின் முக்கிய கட்சி தலைவர்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைகளில் தவறாமல் கலந்துகொண்டு வருபவர் திமுகவின் ஜெகத்ரட்சகன்.
திமுகவில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் ஜெகத்ரட்சகனை அழைத்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
1996-ம் ஆண்டு திமுக- தமாகா கூட்டணிக்கு ரஜினி ஆதரவு அளித்ததன் பின்னணியில் ஆர்.எம்.வீரப்பன் பங்கு மிக முக்கியமானது.
அப்போது நடைபெற்ற அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் ஜெகத்ரட்சகனும் பங்கேற்றிருந்தார். அப்போது முதல் ரஜினியுடன் மிக நெருக்கமானவராகவே ஜெகத்ரட்சகன் இருந்து வருகிறார்.
தற்போது தனிக்கட்சி தொடங்கும் ரஜினிகாந்த், தமது கட்சியின் பொதுச்செயலராக நீங்களே இருக்க வேண்டும் என ஜெகத்ரட்சகனை கேட்டு வருகிறாராம்.
திமுகவில் அதிருப்தியுடன் இருக்கும் ஜெகத்ரட்சகனும் ரஜினிகாந்தின் வேண்டுகோளை ஏற்கும் நிலையில்தான் இருக்கிறார் என கூறப்படுகிறது.