அமெரிக்காவில் நியூயார்க்கில் மட்டும் கொரோனா காரணமாக மொத்தம் 27 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று அம்மாகாண கவர்னர் ஆண்ட்ரு க்யுமோ அச்சம் தெரிவித்துள்ளார்.
கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா தோல்வியை சந்திக்க தொடங்கி உள்ளது. அமெரிக்காதான் கொரோனா காரணமாக உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் கொரோனா காரணமாக 886,709 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 50,243 பேர் அமெரிக்காவில் பலியாகி உள்ளனர். நியூயார்க்கில் மட்டும் 20851 பேர் பலியாகி உள்ளனர். அங்கு 268,581 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் நியூயார்க்கில் மட்டும் கொரோனா காரணமாக மொத்தம் 27 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று அம்மாகாண கவர்னர் ஆண்ட்ரு க்யுமோ அச்சம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், கொரோனா ஒருவரை தாக்கினால் அவரின் உடலில் ஆண்டிபாடிகள் ஏற்படும். இந்த ஆண்டிபாடி சோதனையை நியூயார்க்கில் சோதனை செய்து பார்த்தோம். நியூயார்க்கில் இந்த சோதனையை ரேண்டம் சோதனையாக செய்து பார்த்தோம்.
இதில் நாங்கள் சோதனை செய்த 14% பேருக்கு கொரோனாவிற்கான ஆண்டிபாடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 3000 பேருக்கு சோதனை செய்தோம்.
இதில் 14% பேருக்கு கொரோனா ஆண்டிபாடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மொத்தமாக நியூயார்க்கில் 27 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
நியூயார்க்கின் பாதிப்பு விகிதத்தை வைத்து இந்த முடிவை எடுத்துள்ளோம். நியுயார்க்கில் தற்போது இறப்பு சதவிகிதம் 0.5% என்ற நிலையில் உள்ளது.
ஆனால் இது வரும் நாட்களில் அதிகரிக்கிறது. இந்த சோதனைகளை செய்த நேரத்தில், ஆண்டிபாடி சோதனையில் கொரோனா இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் எல்லாம் வெளியே சுற்றும் நபர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது கடைகளுக்கு பொருட்கள் வாங்கும் செல்லும் நபர்கள், வாக்கிங் செல்லும் நபர்கள் ஆகியோர்தான் இப்படி சோதனையில் பாசிட்டிவ் என்று வந்துள்ளது.
ஆனால் இது எப்படி பரவியது என்று சொல்ல முடியாது. இது தொடர்பாக விசாரணை செய்வது கடினம். அதேபோல் நியூயார்க்கில் தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. வரும் நாட்களில் உண்மையான இறப்பு எண்ணிக்கை தெரியும். பலர் மருத்துவமனைக்கு வெளியில் மரணம் அடைந்து உள்ளனர். அவர்களை கணக்கில் கொண்டால் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அச்சப்படுகிறோம்.
நாங்கள் குறைவான நபர்களுக்குத்தான் சோதனை செய்து இருக்கிறோம். இன்னும் வரும் நாட்களில் இந்த ஆண்டிபாடி சோதனையை மேலும் பலருக்கு செய்வோம். ஆஃப்ரோ அமெரிக்கன் மற்றும் ஹிஸ்பானிக் மக்களிடம் அதிகம் சோதனை செய்ய இருக்கிறோம் . அவர்களுக்குத்தான் அதிகமாக கொரோனா தாக்குகிறது என்பதால் அவர்களிடம் அதிகமாக கொரோனா சோதனைகளை செய்ய இருக்கிறோம், என்று கவர்னர் ஆண்ட்ரு க்யுமோ தெரிவித்துள்ளார்.

