நியுஃபவுன்லண்டில் பொது கட்டடங்கள் தீக்கிரை: ஒருவர் கைது

நியுஃபவுன்லண்டில் பொது கட்டடங்கள் தீக்கிரை: ஒருவர் கைது

கனடா- நியுஃபவுன்லண்ட், மில்ரவுன் பகுதியில் பாடசாலை, நகர மணடபம் மற்றும் பொலிஸ் நிலையம் ஆகியன தீப்பிடித்துள்ளன.

நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நியுஃபவுன்லண்டின் தென் கரையில் அமைந்துள்ள மில்ரவுன் என்ற பகுதியிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் பாடசாலை முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து ஒருவரை கைது செய்ததாக தெரிவித்த பொலிஸார் மேலதிக தகவல் எதனையும் தெரிவிக்கவில்லை. தீ சம்பவம் ஏற்பட்ட பாடசாலையும் நகர மண்டபமும் அடுத்தடுத்து உள்ள போதிலும், பொலிஸ் நிலையம் சிறு தூரத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *