நாம் தமிழர் சீமான் அதிரடி கைது
சென்னையில் இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டத்தில ஈடுபட்ட நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழக மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படையை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியின் சீமான் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துக்கொண்ட நுற்றுக்கணக்கானோர் இலங்கை கடற்படையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
இதனையடுத்து, இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.