Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு!

July 22, 2020
in News, Politics, World
0

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன. ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து ஆலய வழிபாடுகளில் மேற்கொள்ள முடியும் என யாழ்ப்பாணம் மாநகர சபையின் பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்துள்ளார்.

அதற்காக ஆலயத்தில் சுகாதார நடைமுறைகள் தொடர்பான விடயங்களை கண்காணிப்பதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்றைய தினம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

இம்முறை ஆலய திருவிழாவின் போது அன்னதானம், காவடி, நேர்த்திக்கடன் போன்றவற்றுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்திற்கு வரும் பக்தர்களை மட்டுப்படுத்துவதில் எந்த விதமான நடவடிக்கையும் சாத்தியமாகவில்லை. குறிப்பாக ஆலயத்திற்கு பக்தர்களின் எவ்வளவு தொகைக்கு மேல் வருகிறார்கள், அவர்களை நாங்கள் அனுமதிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இது வரலாற்றுப் பிரசித்திபெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவாகும்.

குறிப்பாக ஆலய வளாகத்தில் இம்முறை கடைகள் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கலைநிகழ்வுகள் சொற்பொழிவுகள், இதர சமயம் சார்ந்த பஜனை நிகழ்வுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளன. எனவே ஆலயத்துக்கு வருபவர்கள் சுகாதார நடைமுறையினை கடைப்பிடிப்பதன் மூலம் நாங்கள் இந்த தொற்று நோயிலிருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

குறிப்பாக ஆலய திருவிழாவின் போது சமூக விடை வெளியிணை பேணுதல் மிகவும் அவசியமானது. சுகாதார நடைமுறையினை கண்காணிப்பதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபடுவார்கள். ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் முகக் கவசம் அணிந்தல் வேண்டும்.

அத்துடன், ஆலயத்தின் சுற்றாடலில் அமைக்கப் பெற்றுள்ள நீர்க்குழாயில் பக்தர்கள் கைகளைக் கழுவுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

வரும் 25ஆம் தேதி சனிக்கிழமை கொடியேறகத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன. இம்முறை கோரொணா தொற்று காரணமாக கடைகள் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு வர வேண்டிய 20 மில்லியன் ரூபா வருமானம் இழப்பாகியுள்ளது.

நாங்கள் வருமானத்தினை பார்க்கவில்லை. மாறாக பொதுமக்களின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம். எனவே யாழ்ப்பாணம் மாநகர சபை எடுத்திருக்கும் இந்த முடிவுக்கு அனைத்து பக்தர்களும் தமது ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Previous Post

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!!

Next Post

பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் முறைப்பாடு!

Next Post

பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் முறைப்பாடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures