Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நந்திக்கடல் – நாயாறு புனரமைப்பு தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் விசேட கவனம்!

February 25, 2020
in News, Politics, World
0

நீர் வேளாண்மையை விருத்தி செய்யும் நோக்கில் நந்திக்கடல் நாயாறு மற்றும் தொண்டமானாறு உட்பட வடக்கின் பல்வேறு நீர் நிலைகளை புனரமைப்பது தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்றது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் உடனடியாக நாயாறு மற்றும் நந்திக்கடல் ஆகிய நீர்நிலைகளின் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த புனரமைப்பு பணிகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு தேவையான, நாரா எனப்படும் நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதி, பிரதேச செயலர்கள் ஊடாக அகழப்படுகின்ற சேற்று மணலை கொட்டுகின்ற இடத்தினை தெரிவு செய்து அங்கு கொட்டுவதற்கான சுற்றுச் சூழல் திணைக்களம், வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம், கரையோர பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றின் அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் தலைமைகளின் அக்கறையீனம் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக புனரமைப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் உள்ள நாயாறு மற்றும் நந்திக்கடல் நீர் நிலைகளில் சுனாமி அனர்த்தத்தினால் கரையொதுக்கப்பட்ட பெருமளவு ஆழ்கடல் பொருட்களும் மணல் படுக்கைகளும் தேங்கி கிடக்கின்றன.

இதன்காரணமாக குறித்த களப்பு பிரதேசத்தில் நீர்வாழ் உயினங்களின் உற்பத்தி குறைவடைந்து வருவதாக குறித்த நீர்நிலைகளை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்ற பிரதேச மக்களினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருப்பட்ட நிலையில் குறித்த களப்பு நீர் நிலைகளை புனரமைப்பு செய்வதில் அமைச்சர் தீவிர கவனம் செலுத்தி வருக்கின்றார்.

குறித்;த நீர்நிலைகள் இரண்டும் பூரணமாக புனரமைக்கப்படுகின்ற நிலையில் சுமார் 3000 ஆயிரம் குடும்பங்கள் நன்மையடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை தொண்டமானாறு, இரணைமாதா நகர், கிறாஞ்சி, செட்டியார் குறிச்சி போன்ற பிரதேச நீர்நிலைகளையும் புனரமைப்பு செய்வது தொடர்பான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய கலந்துரையாடலில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் செயலாளர் உட்பட்ட அதிகாரிகள், இலங்கை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனம், கரையோர முகாமைத்துவ திணைக்களம், நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி நிறுவனம்(நாரா), கரையோர முகாமைத்துவ திணைக்களம், கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றின் நிறைவேற்று அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Previous Post

100 நாட்களில் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள்

Next Post

மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்

Next Post

மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026
விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

June 25, 2026
அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும் – சுரேஷ்

வவு­னியா மேயர், சாவகச்சேரி உதவித் தவிசாளர் ஆகியோரை பதவி நீக்கியமைக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்

June 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures