நடுவானில் 300 பேருடன் பறந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
வானில் போய் கொண்டிருந்த இரண்டு மணி நேரத்தில் ஈரான் நாட்டின் மேல் விமானம் சென்று கொண்டிருந்த போது விமானிக்கு விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக விமானி ஈராக்கில் விமானத்தை இறக்காமல் குவைத் நகரில் வேகமாக சென்று இறக்கினார்.
பின்னர் வெடிகுண்டு நிபுணர்களும், அதிகாரிகளும் விமானத்தை சோதனை செய்ய வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. பின்னர் தான் அது வெறும் புரளி என தெரிய வந்தது.
இதை விமான அதிகாரிகள் உறுதி செய்தனர். பின்னர் விமானத்திலிருந்த பயணிகள் பத்திரமாக குவைத்திலிருந்து தாங்கள் போக வேண்டிய இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தற்போது இந்த வெடிகுண்டு புரளி விடயமாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.