‘வெள்ளைப் பூக்கள்’, ‘போர்’, ‘பேச்சி’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் தேவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ யோலோ ‘ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை பகிர்ந்து உற்சாகமாக தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் சாம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ யோலோ ‘ எனும் திரைப்படத்தில் தேவ், தேவிகா , ஆகாஷ் , படவா கோபி , வி ஜே நிக்கி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சஹிஷ்னா சேவியர் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் கொமடி ஜேனரிலான இந்த திரைப்படத்தை எம் ஆர் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஷ் செல்வராஜ் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள படக்குழு, தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்றும், விரைவில் படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகியவை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.













