Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகர் டேனியல் பாலாஜி காலமானார் ; கண்கள் தானம் அளிக்கப்பட்டன

March 30, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
நடிகர் டேனியல் பாலாஜி காலமானார் ; கண்கள் தானம் அளிக்கப்பட்டன

தென்னிந்திய பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது கண்கள் தானம் அளிக்கப்பட்டுள்ளன.

டேனியல் பாலாஜி தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். சிரியலில் அறிமுகமான இவர் அதன் பிறகு பல திரைப்படங்களில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியவர்.

குறிப்பாக காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பை இன்றளவும் பலரும் புகழ்ந்து பேசுவார்கள். இது தவிரப் பைரவா, வட சென்னை உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

இப்படி தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்த டேனியல் பாலாஜிக்கு நேற்றிரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக அவர் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 

அங்கே வைத்தியர்கள் அவரது உயிரைக் காப்பாற்றத் தீவிர முயற்சிகளை எடுத்தனர். இருந்த போதிலும் அவர் சிகிச்சை பலனில்லாமல் காலமாகியுள்ளார். அவருக்கு வயது  48 ஆகும். டேனியல் பாலாஜியின் இந்த திடீர் மறைவு திரையுலகினரின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேனியல் பாலாஜியின் இந்த திடீர் மறைவு ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று பலரும் சமூக ஊடகங்களில் இரங்கல்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

டேனியல் பாலாஜியின் உடல் புரசைவாக்கத்தில் வரதம்மல் காலனியில் உள்ள அவருடைய வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர்கள் வெற்றிமாறன், கவுதம் மேனன் ஆகியோர் டேனியல் பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

டேனியல் பாலாஜி தனது கண்களை தானம் செய்திருந்தார்.  வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டு இருந்த நிலையில், அங்கே சென்ற வைத்தியர்கள் கண்களை தானம் பெற்றுள்ளனர். சினிமாவில் என்ன தான் வில்லன் நடிகராக இருந்தாலும் உயிரிழந்த பிறகும் அவர் மற்றவர்களுக்குப் பார்வையைத் தருகிறார் என்று பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

இன்று சனிக்கிழமை மாலை அவரது உடல் ஓட்டேரியில் அமைந்துள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

Previous Post

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண்நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

Next Post

யாழ். போதனா வைத்தியசாலையில் பத்து மாடியில் புதிய கட்டடம் – வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி

Next Post
யாழ்.போதனா வைத்தியசாலையின் வரலாற்று சாதனை | சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி

யாழ். போதனா வைத்தியசாலையில் பத்து மாடியில் புதிய கட்டடம் - வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

June 28, 2026
வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

June 28, 2026
காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் ; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் ; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு

June 28, 2026
மட்டக்களப்பில் உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் உலகளாவிய திருக்குறள் மாநாடு

June 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures