தமிழ் சினிமாவில் 90களில் ரஜினி, கமலுக்கு இணையாக வலம் வந்தவர் நடிகர் சரத்குமார். இவர் தற்போது அரசியலில் ஈடுபட்டு தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் வீட்டில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமாரின் வீட்டில் தான் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
அதிரடியாக இவரது வீட்டில் சோதனை நடப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.