ரொறொன்ரோ தம்பதிகள் டசின் கணக்கில் மிருகங்களை குடியிருப்பு தொகுதிக்குள் வைத்திருந்த குற்றத்திற்காக வெளியேற்றப்பட்டனர்.
அப்பார்ட்மென்டிற்கு வெளியிலும் பல பூனைகள் அலைந்து திரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தானும் தனது மனைவியும் வீடற்றவர்கள் என குடியிருப்பாளரான வில்சன் தெரிவித்தார். இருவரும் வயதானவர்கள். வில்சன் ஒரு கனடிய போர் விரர்.
இவர்களின் கதையின் மறு பக்கம் வித்தியாசமானது. கட்டிடத்தில் பூனைகளின் சிறுநீர் குறித்த விரிவான புகார்கள்.
மிருகங்களின் நலன் மிக முக்கியமானதென வில்சன் தெரிவித்தார்.
குடியிருப்பு விடுதி தலைவர் கடந்த ஒருவருடமாக வில்சனை வெளியேற்ற முயன்றுள்ளார்.
பூனைகள் அப்பார்ட்மென்ட் பூராகவும் அலைந்து திரிந்தன எனவும் பல பூனைகளிற்கு கண் தொற்று இருந்ததெனவும் கூறப்பட்டது.
ஒன்ராறியோ விலங்குகள் வதை தடுப்பு சொசைட்டி இச்சம்பவம் குறித்து புலன்விசாரனையில் ஈடுபட்டுள்ளது. தம்பதிகளிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எதுவும் பதிவாகவில்லை.
68 பூனைகளும் பூனைக்குட்டிகளும் கருணை இல்லங்களிற்கு கொண்டு செல்லப்பட்டன. நாயும் கண்டுபிடிக்கப்பட்டது.
2008ல் வில்சன் 50-நாய்கள் மற்றும் இரண்டு பூனைகள் வைத்திருந்ததாக இவர் மீது மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது தெரியவந்தது.
தம்பதிகளின் குடியிருப்பில மிருகங்கள் வாழும் நிலை குற்றமாகும் என தெரிவிக்கப்பட்டது.