Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தொடர்ந்து திரைப்படங்களை தயாரிப்பேன்- விஷ்ணு விஷால்

December 8, 2022
in Cinema, News
0
விஷ்ணு விஷால் படத்தின் புதிய அப்டேட்

‘கட்டா குஸ்தி போன்ற நகைச்சுவைக்கும், இன்றைய சமூகத்திற்கு தேவையான கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தொடர்ந்து தயாரிப்பேன்” என விஷ்ணு விஷால் தெரிவித்தார்.

தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா இணைந்து தயாரித்து, அண்மையில் வெளியான திரைப்படம் ‘கட்டா குஸ்தி’.

இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதையின் நாயகியாக நடித்தார். விஷ்ணு விஷால் அவரது கணவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பேராதரவை பெற்று வருகிறது. இதற்கு ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில்  படக்குழுவினர் விழா ஒன்றினை சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்நிகழ்வில் படக் குழுவினர் பங்கு பற்றி தங்களது நன்றியை தெரிவித்தனர்.

இதன் போது பேசிய விஷ்ணு விஷால், ” கொரோனா காலகட்டத்தின்போது இயக்குநர் செல்லா எம்மை சந்தித்து இக்கதையை விவரித்தார். இக்கதையில் நான் கதாநாயகன் இல்லை என்று தெரிந்திருந்தும், கதையில் நாயகிக்கு தான் முக்கியத்துவம் இருக்கிறது என்று தெரிந்தும், இந்த கதை ஆண்- பெண் சமம் என்பதை பேசுவதாலும், திருமணமான பிறகும் பெண்களின் எண்ணங்களுக்கு அவரது கணவர்கள் உந்து சக்தியாக திகழ வேண்டும் என்பதை வலியுறுத்துவதாலும், இந்த படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டேன்.

மேலும்  கொமடியும் கன்டென்ட்டும் நன்றாக இருந்ததால் தயாரிக்க தொடங்கினேன். இந்தத் திரைப்படம் வெளியான முதல் நாளை விட இரண்டாவது நாளில் கூடுதல் வசூலை பெற்றது. இரண்டாவது நாளை விட மூன்றாவது நாளில் வசூல் மடங்கு உயர்ந்தது. ‘கட்டாகுஸ்தி’ திரைப்படம் மூன்று நாட்களில் 30 கோடி ரூபா வசூலித்ததாக திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இது எமக்கு உற்சாகத்தையும், தொடர்ந்து இது போன்ற படங்களை தயாரிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் அளித்திருக்கிறது. நகைச்சுவைக்கும் இது போன்ற சமூகத்துக்கு தேவையான கருத்தினை கொண்ட படங்களையும் தொடர்ந்து தயாரிப்பேன்” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில், ”முதலில் இந்த கதையை இயக்குநர் எம்மிடம் தெரிவித்த போது, இதற்கு நான் பொருத்தமாக இருப்பேனா..! என்ற தயக்கம் இருந்தது. அதனால் ஏற்றுக் கொள்ள மறுத்தேன். பிறகு சில வாரங்கள் கழித்து மீண்டும் இந்த வாய்ப்பு எம்மைத் தேடி வந்தது. முயற்சி செய்து பார்ப்போமே..!  என எண்ணி நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இதன் பிறகு இயக்குநரின் வேண்டுகோளுக்கிணங்க மல்யுத்த தற்காப்பு கலை பயிற்சியாளரிடம் பத்து நாட்கள் பயிற்சி பெற்றேன். அதன் பிறகு நடித்தேன். இந்தப் படத்தில் எனது கணவராக நடித்த நடிகர் விஷ்ணு விஷாலை இப்படத்தின் தயாரிப்பாளர் என்று தெரிந்தும், காட்சியின் தன்மைக்காக நிஜமாகவே தாக்கினேன். இப்படத்தில் வெற்றிக்கு நடிகர் விஷ்ணு விஷால் உள்ளிட்ட அனைவரும் அளித்த ஒத்துழைப்பு தான் காரணம்” என்றார்.

Previous Post

முதலிடத்தை பிடித்த தனுஷ்

Next Post

முக்கிய முடிவெடுக்கக் கூடுகின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு!

Next Post
யாரை ஆதரிப்பது | தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் குழப்பம்

முக்கிய முடிவெடுக்கக் கூடுகின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures