தென் கொரியாவின் ஜனாதிபதி மாளிகையை அழிப்பது போன்ற புகைப்படம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. வடகொரியாவின் இந்த செயல்பாடு உலகநாடுகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளது என்று கூறப்பட்டு வருகிறது.
வடகொரியாவின் இந்த செயலால் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கு போர் ஏற்படும் நிலை ஏற்பட்டது. அப்போது வடகொரியா அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை தாக்குவது போன்ற வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து வடகொரியாவின் இந்த செயலுக்கு எல்லாம் காரணம் அதிபர் கிங்-ஜங்-உன் தான், இதனால் அவரை கொலை செய்து விட்டால் பிரச்சனை தீர்ந்து விடும் என்று எண்ணி, அமெரிக்காவும்- தென் கொரியாவும் இணைந்து சதித்திட்டம் தீட்டி வருவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் தென்கொரியாவின் ஜனாதிபதி மாளிகையை முற்றிலும் அழிப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இதை பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அந்த புகைப்படம் சாட்டிலைட்டில் இருந்து எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வடகொரியாவின் செயல்பாடாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
கடந்த வருடம் வடகொரியா இராணுவ வீரர்கள் அதிரடி பயிற்சியில் ஈடுபட்டதாகவும், அப்போது அவர்கள் தென் கொரியாவின் புளூ ஹவுஸ் என்று அழைக்கப்படும் பகுதியை தாக்குவது போன்ற புகைப்படமும் வெளியாகியிருந்ததாக தெரிவித்துள்ளது.