துருக்கி ஜனாதிபதியை விமர்சித்த கனேடியர் கைது

துருக்கி ஜனாதிபதியை விமர்சித்த கனேடியர் கைது

துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகனை சமூக வலைத்தளத்தின் ஊடாக விமர்சித்த கனேடியர் ஒருவர் கைது செய்யப்பட்டு துருக்கியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி துருக்கியின் வடகிழக்கு நகரான கர்ச்சில் கைது செய்யப்பட்டதாக அவரது நண்பர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து கனேடிய அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், துருக்கியில் கைது செய்யப்பட்ட நபருக்கு தூதரக உதவிகளை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளனர். எனினும், தனியுரிமை விடயங்களை கவத்தில் கொண்டு மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.

துருக்கி குற்றவியல் தொகுப்பின் பிரகாரம் நாட்டின் ஜனாதிபதியை எவரேனும் அவமதிக்கும் பட்சத்தில் அந்நபர் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று கூறப்படுகின்றது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *