இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது அனுதாபங்களையும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், தீவிரவாத தாக்குதல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் பாதுகாப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டினை அதிரச் செய்த குண்டு வெடிப்புகள் தொடர்பாக இதுவரையில் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெண்களும் உள்ளடங்குவதாகவும் கூறப்படுகின்றது.
இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.