தீர்க்கப்படாத கொலை குறித்த தகவல் தெரிவிப்பவர்களிற்கு 150,000டொலர்கள் வெகுமதி!

தீர்க்கப்படாத கொலை குறித்த தகவல் தெரிவிப்பவர்களிற்கு 150,000டொலர்கள் வெகுமதி!

நோவ ஸ்கோசிய நீதித்துறை Elmer Yuill என்பவரின் கொலையாளியை கண்டுபிடிக்க உதவுபவர்களிற்கு 150,000 டொலர்கள் வெகுமதி வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஒருவர் அல்லது பலர் நோவ ஸ்கோசியா. குளோசெஸ்ரர் கவுன்ரியில், பீவர்புறூக்கில் உள்ள Yuill லிற்கு சொந்தமான பகுதியில் அக்டோபர், 26, 1991 காலை ஒளிந்திருந்தனர்.
Yuill தனது பசுக்களை கவனித்து கொண்டிருக்கையில் சுடப்பட்டார். 77-வயதுடையவரின் உடல் தலை குப்புற கிடந்த நிலையில்  பணியாளரால் பண்ணை தரையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இவரது மரணம் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் விடை கண்டு பிடிக்கப்படாத குற்றங்கள் திட்டத்துடன் 1888-710-9090 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டால் சன்மானம் வழங்கப்படும். இவர்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க அழைக்கப்படுவர்.
கொலை சம்பந்தப்பட்டவர் அல்லது பட்டவர்களை நீதி மன்றத்திற்கு கொண்டுவந்து நீண்டகாலமாக பதிலிற்கு காத்திருக்கும் குடும்பத்தினருக்கு பதிலளிப்பதே எங்கள் குறிக்கோள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *