வடக்கு மாகாணத்தின் போக்குவரத்து மற்றும் கடற்றொழில் அமைச்சர் பா. டெனீஸ்வரனை தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்குவதற்கு டெலோ கட்சி தீர்மானித்துள்ளது.
கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக இருந்ததால் ஆறு மாத காலத்திற்கு அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அந்தக் கட்சியின் செயலாளர் எஸ் ஶ்ரீகாந்த கூறினார்.
கட்சியின் மத்திய செயற்குழ நேற்று கூடியிருந்த போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் கூறினார்.
வரும் நாட்களில் டெனீஸ்வரன் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை ஒன்றை நடத்தி இறுதித் தீர்மானம் எடுக்கும் வரையில் அவரின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதாக அந்தக் கட்சியின் செயலாளர் எஸ் ஶ்ரீகாந்த கூறினார்.
