தரையிலிருந்து மேலெழுந்து வீட்டிற்குள் மோதிய வாகனம்!

ஒன்ராறியோ- 26-வயதுடைய நபர் ஒருவர் நிதானமற்ற நிலையில் வாகனத்தை செலுத்தி வாகனம் மேலெழுந்து வீடொன்றிற்குள் புகுந்து புகை மண்டலத்தை ஏற்படுத்திய சம்பவம் நியு ஹம்பேர்க் என்ற இடத்தில் நடந்துள்ளது.

சாரதி கட்டுப்பாட்டை இழந்து தீயணைப்பு குழாயுடனும் வீடொன்றிற்கு முன்னால் பாறை ஒன்றுடனும் மோதியதாக பொலிசார் தெரிவித்தனர். வாகனம் பின்னர் காற்றில் தூக்கி எறியப்பட்டு வீட்டு கூரையின் ஊடாக முன்தாழ்வாரத்திற்குள் சறுக்கியுள்ளது.

சனிக்கிழமை இரவு 11-மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதுவரை கேட்டிராத மிக பெரிய சத்தத்துடன் கூடிய விபத்து என வீட்டு சொந்தகாரரான ஹெதர் வில்சன் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

கதவை திறந்து பார்த்தபோது புகை மண்டலம் வீட்டிற்குள் புகதொடங்கியதெனவும் கூறினார்.

வாகனத்திற்குள் மூவர் இருந்துள்ளனர். ஆனால் எவரும் காயமடையவில்லை. அயலவர்கள் வாகனத்தின் யன்னல் கதவை உடைத்து சாரதியை வெளியே எடுத்தனர்.வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர். வீட்டிற்கு கிட்டத்தட்ட 60,000 டொலர்கள் சேதமடைந்திருக்கலாம் எனவும் அவரது கார் சேதமடைந்துள்ளதாகவும் வில்சன் தெரிவித்தார்.

வாகனத்தின் சாரதி மீது குற்றம் சுமத்தப்பட்டது. யூன் மாதம் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

flipsflips1flips2

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *