தம்பானே பழங்குடிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோவின் மனைவி ஹீன் மெனிக்கா கொவிட்-19 தொற்று காரணமாக நேற்றைய தினம் காலமானார்.
ஹீன் மெனிக்கா, நிமோனியா காரணமாக மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையிலேயே அவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
ஹீன் மெனிக்கா ஒன்பது பிள்ளைகளின் தாயார் ஆவார். அவரும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் கடந்த 29 ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பண்டைய கிராமமான தம்பானே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.