தமிழ் மரபுரிமை மாதத்தை தமிழர் பகுதியிலேயே கொண்டாடும் பற்றிக் பிறவுன்
தமிழ் மரபுரிமை மாதக் கொண்டாட்டங்களை ஒன்றாரியோ மாகாணக் கண்சவேட்டிவ் கட்சியின் தலைவர் திரு.பற்றிக் பிறவுன் ஸ்காபரோ பகுதியில் 1686 எல்ஸ்மயர் வீதியில் [1686 Ellesmere Road] உள்ள ஜே.சி. மண்டபத்தில் கொண்டாடவுள்ளார்.
தமிழர்களின் மரபுத் திங்கள் எங்கனுமே கொண்டாடப்பட்டு வரும் இந்த வேளையில் இதுவரை காலமும் ஒன்றாரியோ சட்டமண்றத்தில் நடாத்தி வந்த கண்சவேட்டிவ் கட்சி இந்த முறை தமிழர்களின் நிலத்திற்கே விழாவை எடுத்துச் செல்கின்றது.
ஜனவரி மாதம் 31ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6.30க்கு தமிழர்களிற்காக நடாத்தப்படும் இந்த விழாவில் சகலரும் கட்சி வேறுபாடிண்றிக் கலந்து கொண்டு தமிழர் மரபுரிமை மாதத்தைக் கொண்டாடலாம்.
தங்களுடைய வருகையை [email protected] என்ற மின்னஞ்சல் ஊடாக முற்கூட்டியே பதிவு செய்யலாம்.