வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணிக்கட்சியின் முதலாவது மத்திய குழுக்கூட்டம் யாழில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு அருகாமையில் கோயில் வீதியிலுள்ள விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் இக்கூட்டம் மதியம்வரை நடைபெற்றது.
இதன்போது தமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு மற்றும் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களென பலரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன., கட்சியின் கொள்கை மற்றும் யாப்பு என்பனவும் வெளிப்படுத்தப்பட்டன..
முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழுவிற்கு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் விபரம் வருமாறு.














