தமிழ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ஒன்டாரியோ மாநில முதல்வர் Kathleen Wynne

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து தமிழ் மக்களுக்கும் ஒன்டாரியோ மாநில முதல்வர் Kathleen Wynne வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒன்டாரியோ மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகங்களுக்கு, இது மகிழ்ச்சிக்குரிய ஒரு காலமாகும்.

குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் கடந்த ஆண்டைப் பிரதிபலிக்க ஒரு வாய்ப்பாகவும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் புத்தாண்டை முன்னோக்கி செல்வதற்கு இது ஒரு சந்தர்ப்பமாகும்.

தமிழ் சமூகத்துக்கு வாழ்த்து தெரிவிக்க இந்த சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன்.

மாறி வரும் சமூகத்தின் உறுப்பினர்கள் எமது பன்முக கலாசார வெற்றிக்கான ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளனர்.

மேலும் அவர்கள் ஒன்டாரியோவை வாழ்வதற்கு சிறந்த இடமாக தொடர்ந்து மாற்றிக் கொண்டுள்ளனர்.

எமது மாகாணத்தின் சமூக, பொருளாதார மற்றும் கலாசார வாழ்க்கைக்கு அவர்களின் பலமான பங்களிப்புகளுக்கு நன்றியுடன் இருக்கிறேன்.

மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத கொண்டாட்டத்திற்காகவும், மகிழ்ச்சிக்காகவும், நல்ல ஆரோக்கியத்திற்காகவும், முன்னேற்றத்திற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *