Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ் அரசியல் கட்சிகள் விரைவில் ஒன்றாக வேண்டிய நிலைமை வரும்:விக்னேஸ்வரன்

November 11, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எமது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமானால் சர்வகட்சியில் இணைவது குறித்து அவதானம் | விக்கினேஷ்வரன்

“எங்களுக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தாலேயே தமிழர்களின் அரசியல் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலையில் உள்ளது. வெகுவிரைவிலே தற்போதைய நிலையைப் பார்த்து,தற்போதைய சூழலைப் பார்த்து ,பின்புலத்தைப் பார்த்து நாங்கள் அனைவரும் ஒற்றுமையடைய வேண்டிய கட்டம் வரும்.”என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்ததாவது,”தமிழர்களின் அரசியல் நிலை பின்னோக்கிச் செல்லும் விதத்தில்தான் உள்ளது. எங்களுக்குள் ஒற்றுமை மிகவும் அவசியம். ஆனால், அதற்கு நாங்கள் எப்போதும் இடம் கொடுப்பதில்லை.

எங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளையும், வேற்றுமைகளையும் கூறிக்கொண்டு எங்களுக்குள்ளேயே பிரச்சினைப்பட்டுக் கொண்டிருக்கின்றோமே தவிர மக்களுக்கு என்னென்ன தேவை என்பது தொடர்பில் நாங்கள் நினைப்பதில்லை. இப்போது நாங்கள் அரசியல் பேசத் தொடங்கி வெறும் பேச்சாகவே எங்களுடைய அரசியல் போய்க்கொண்டிருக்கின்றது.

சுமந்திரனுக்கு பாராட்டு

தமிழ் அரசியல் கட்சிகள் விரைவில் ஒன்றாக வேண்டிய நிலைமை வரும்:விக்னேஸ்வரன் | Tamil Political Parties Will Need To Come Together

நான் சுமந்திரன் எம்.பிக்குப் பாராட்டுத் தெவித்து ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் கருத்துக்குச் சுமந்திரன் எம்.பி. வழங்கிய பதிலுக்காக அவரைப் பாராட்டி மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.

‘வடக்கு, கிழக்குத் தமிழர்களின் தலைவர்கள் தங்களுக்குள் கட்சிகள், அணிகளாகப் பிரிந்து நின்றாலும், தேசிய இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வே ஒரே வழி என்பதில் மிக உறுதியாகவும், ஒருமித்த நிலைப்பாட்டிலும் உள்ளனர்.

எனவே, தமிழ்த் தலைவர்கள் பிளவுபட்டிருக்கின்றார்கள் என்று சாக்குப்போக்குக் கூறி, சமாளிப்பதை விடுத்து, சமஷ்டித் தீர்வுக்கு வழி பாருங்கள்’ என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுக்கு சுமந்திரன் எம்.பி. நல்ல பதிலை வழங்கியுள்ளார். 

நான் சுமந்திரன் எம்.பிக்குப் பாராட்டுத் தெரிவித்து அனுப்பிய மின்னஞ்சலுக்கு அவர் உடனே நன்றி தெரிவித்து எனக்குப் பதில் அனுப்பியுள்ளார்.

எங்களுக்குள் இருப்பவர்கள் என்ன நன்மையைச் செய்தாலும் நாங்கள் அதைப் பாராட்டுபவர்களாவே இருக்க வேண்டும்.

தமிழர்களுக்கான விடிவு

தமிழ் அரசியல் கட்சிகள் விரைவில் ஒன்றாக வேண்டிய நிலைமை வரும்:விக்னேஸ்வரன் | Tamil Political Parties Will Need To Come Together

எந்தநேரமும் எங்களுடைய மக்கள் மத்தியில் அவர் முன்னுக்குச் செல்லக்கூடாது என்ற எண்ணத்தில் நாங்கள் வளர்ந்தோமானால் எந்தக் காலத்திலும் தமிழர்களுக்கான விடிவை நோக்கிச் செல்ல முடியாது.

ஆகவே எங்களுக்குள் ஒற்றுமை மிகவும் அவசியம். அந்த ஒற்றுமை இல்லாத காரணத்தாலேயே தமிழர்களின் அரசியல் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலையில் உள்ளது. வெகுவிரைவிலே தற்போதைய நிலையைப் பார்த்து, தற்போதைய சூழலைப் பார்த்து, பின்புலத்தைப் பார்த்து நாங்கள் அனைவரும் ஒற்றுமையடைய வேண்டிய கட்டம் வரும் என்பது என்னுடைய கருத்து”என கூறியுள்ளார்.

Previous Post

வடக்கு, கிழக்கு தமிழர்களின் பிரச்சினை! நாடாளுமன்றில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

Next Post

வியட்நாம் கடலில் மீட்க்கப்பட்ட இலங்கையர்களை அழைத்து வரும் செயற்பாடுகள் முன்னெடுப்பு | வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

Next Post
எரிபொருளை சிக்கனமாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் | அரசாங்கம்

வியட்நாம் கடலில் மீட்க்கப்பட்ட இலங்கையர்களை அழைத்து வரும் செயற்பாடுகள் முன்னெடுப்பு | வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures