1985ம் ஆண்டு வெளிவந்த ஹிந்திப் படம் தேரி மெஹர்பானியா. கே.சி.பொகாடியா தயாரித்திருந்தார். விஜய் ரெட்டி இயக்கிய இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராப், பூனம் தில்லான் நடித்திருந்தனர். லட்சுமிகாந்த், பியாரிலால் இசை அமைத்திருந்தனர். வெள்ளிவிழா கண்ட காதல் படம்.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ஹிந்தியில் தயாரிக்க உள்ளனர். இந்த படத்தின் காதல் மிகவும் பிரபலம். தென்னிந்தியாவிலும் பரபரப்பாக ஓடிய படம் என்பதால் ஹிந்தியில் தயாராகும் அதே நேரத்தில் தமிழ், தெலுங்கிலும் தயாரிக்க இருக்கிறார்கள். இதன் தமிழ் வெர்ஷனில் ஸ்ரீகாந்தும், நிகிஷா படேலும் நடிப்பார்கள் என்று தெரிகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.