Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழர் சமூகத்தை சீரழிக்கும் பகிடிவதை! சத்தியமூர்த்தி

February 9, 2020
in News, Politics, World
0
தமிழர் சமூகத்தை சீரழிக்கும் பகிடிவதை! சத்தியமூர்த்தி

பகிடிவதை என்ற போர்வையில் இடம்பெறும் வன்முறைகள் முற்றாகக் நீக்கப்படல் வேண்டும் என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ். பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதை என்ற பெயரில் இடம்பெற்ற கைபேசி மூல பாலியல் சேட்டை நாடளாவிய ரீதியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பகிடிவதை தொடர்பில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன், யாழ். பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற மிக மோசனமான பகிடி வதை செயற்பாடுகள் வன்மையான கண்டனத்திற்குரியதோடு மிகுந்த கவலையினையும் ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாம் அனைத்து விதமான வன்முறைகளுக்கும் எதிரானவர்கள். வன்முறைச் செயற்பாடுகள் சமூகத்திலிருந்து முற்றாக நீக்கப்படல் வேண்டும்.

நீண்ட கால யுத்தம், அதன் காரணமாக ஏற்பட்ட உடல், உள ரீதியான வடுக்கள் என்பவற்றிலிருந்து இன்னமும் முழுமையாக மீட்சி பெறாத ஒரு சமூகத்திற்குள் பகிடிவதை என்ற போர்வையில் இடம்பெறுகின்ற வக்கிர செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது.

எதிர்காலச் சமூகத்தில் பொறுப்புக்களை ஏற்கவுள்ள, சமூகத்தை வழிநடத்தவுள்ள படித்த இளம் சமூகத்திற்குள் காணப்படும் இவ்வாறான வன்முறை எண்ணங்கள் தமிழ் சமூகத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்காது.

இதற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு நாம் என்றும் எமது ஆதரவினை வழங்குவோம். பகிடிவதை என்ற பெயரில் குறிப்பாக மாணவிகள் மீது இடம்பெறுகின்ற உடல், உள ரீதியான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதனை ஆணித்தரமாக வலியுறுத்துகின்றோம்.

பல்கலைக்கழக மாணவர்கள் சமூகத்தின் முன்மாதிரிகளாக, சமூகத்தை வழிநடத்துகின்றவர்களாக இருக்க வேண்டும். வன்முறை கலாசாரங்கள் எப்பொழுதும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு ஆபத்தானது.

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பல கனவுகளுடன் உயர் கல்விக்காக பல்கலைகழகம் அனுப்புகின்றனர். பகிடி வதையில் ஈடுப்படுகின்ற மாணவர்களைக் கூட பல்கலைகழகத்தில் படிப்பிப்பதற்கு பல பெற்றோர்கள் படும் துன்பங்களை நாமறிவோம்.

எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் எடுத்து பரஸ்பரம் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புக்களை வழங்கி கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையும் நாம் இந்த இடத்தில் கேட்டுக்கொள்வதோடு, பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களின் பெற்றோர்களும், அவர்கள் வாழ்கின்ற சமூகங்களும் பொறுப்புக் கூறுபவர்களாகவும் இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

ஒரு பிள்ளையின் தாய் தூக்கில் தொங்கி மரணம்

Next Post

ரணில் உயிருடன் இருக்கும்வரை பதவி நீக்க போவதில்லை, ரஞ்சன் மீது கல்லெறிய வேண்டும்

Next Post
ரணில் உயிருடன் இருக்கும்வரை பதவி நீக்க போவதில்லை, ரஞ்சன் மீது கல்லெறிய வேண்டும்

ரணில் உயிருடன் இருக்கும்வரை பதவி நீக்க போவதில்லை, ரஞ்சன் மீது கல்லெறிய வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026
பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

July 9, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

July 9, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures