Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்கும் அனுர!

March 20, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தேசிய இனப்பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வை வழங்குவோம் என உறுதிபட கூறுவதற்கு அனுரவுக்கு துணிச்சல் இல்லை என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று(19) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையின் ஆட்சிப் பீடத்திற்கு வரத் துடிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸநாயக்க தேசிய இனப்பிரச்சினைக்கு தங்கள் கட்சி சார்பில் எவ்வாறான தீர்வினை வழங்குவோம் என உறுதி பட கூறுவதற்கு துணிச்சல் அற்றவராக தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழர்கள் கோரும் சமஸ்டி தீர்வு 

பௌத்த சிங்கள மக்களை பகைத்துக் கொள்ளாமல் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்க அனுர நினைக்கிறார்.

தமிழர்கள் கோரும் சமஸ்டி தீர்வு தொடர்பில் பேசக்கூடாது எனக் கூறும் அனுர, தான் வழங்க நினைக்கும் தீர்வை வெளிப்படையாக கூற முதுகெலும்பு அற்றவராக இருப்பதுடன் ஏனைய சிங்கள கட்சி தலைவர்களை விட தான் தந்திரமாக தமிழர்களை ஏமாற்றி விடுவேன் என மனப்பால் குடிக்கிறார்.

தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்கும் அனுர! | Anura Is The Solution To The Ethnic Problem

தமிழர்களின் விடுதலைப் போராட்ட தியாகம் அதன் அர்ப்பணிப்பு போன்றவற்றை கொச்சைப்படுத்தும் வகையில் அனுரகுமார தான் ஆட்சிக்கு வந்தால் மூன்று வேளை உணவை பெற்றுத் தருவதாக கிளிநொச்சியில் கூறியுள்ளார்.

மறுக்கப்பட்ட சுயநிர்ணய உரிமைக்காக போராடிய தமிழர்களின் 1952 ஆண்டு தேர்தல் வரலாற்றை அனுர படிக்கவில்லை. அன்றைய தேர்தல் கோசம் தமிழ் மக்களை நோக்கி சோறா? சுதந்திரமா? என்றவாறே இருந்தது மக்களின் முழுமையான ஆதரவு சுதந்திரம் என்பதாகவே இருந்தது.

ராஜபக்ச அரசாங்கம்

அன்றிலிருந்து இன்று வரை பெரும்பான்மை வடக்கு கிழக்கு தமிழர்களின் நிலைப்பாடு உரிமைக்கானதாகவே புள்ளடி மூலம் காட்டப்பட்டது. இதனை அனுரகுமார புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்கும் அனுர! | Anura Is The Solution To The Ethnic Problem

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் உணவுப் பொருட்களை வன்னிக்கு செல்ல விடாது ராஜபக்ச அரசாங்கம் தடுத்த போது அவர்களுடன் இணைந்து துரோகம் இழைத்து விட்டு இன்று அதே மக்களைப் பார்த்து மூன்று வேளை உணவை தருவோம் என கூறுவதற்கு பதவி ஆசை தானே காரணம்.

ஆகவே சிங்கள கட்சிகள் எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்பதற்கு ஐே.வி.பியும் விதிவிலக்கல்ல எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

இசைஞானி இளையராஜாவின் இசையில் லயிக்க தயாராகுங்கள் | முக்கிய அறிவிப்பு வெளியானது

Next Post

அனைவரும் பார்க்க வேண்டிய மதிமாறன்

Next Post
அனைவரும் பார்க்க வேண்டிய மதிமாறன்

அனைவரும் பார்க்க வேண்டிய மதிமாறன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

June 28, 2026
வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

June 28, 2026
காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் ; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் ; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு

June 28, 2026
மட்டக்களப்பில் உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் உலகளாவிய திருக்குறள் மாநாடு

June 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures