Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

தமிழகத்தில் நுழையும் கேரள மாணவர்கள்

August 25, 2017
in World
0
தமிழகத்தில் நுழையும் கேரள மாணவர்கள்

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இதில் கேரளாவைச் சேர்ந்த 9 மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், சுயநிதி மருத்துவக் கல்லூரி மேனேஜ்மென்ட் ஒதுக்கீட்டு இடங்களுக்குமான தர வரிசைப்பட்டியலை ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் வெளியிட்டார். அதன் அடிப்படையில், நேற்று முதல் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்புக் கலந்தாய்வு நடைபெற்றது. இன்று பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது.

கலந்தாய்வில் பங்கேற்றோர் தங்களின் சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதில் கேரளாவைச் சேர்ந்த 9 மாணவர்கள் போலி இருப்பிடச்சான்றுடன் பங்கேற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

கேரளாவில் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைப்பது கடினம் என்பதால் சிலர் தமிழகத்தில் வசிப்பது போல போலி இருப்பிடச் சான்று பெற்று இங்கு நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் அம்ஜத் அலி என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். அதில், தமிழக அரசு மற்றும் கேரள அரசு வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலை ஆராந்து பார்த்ததில், 9 பேர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

கேரளாவில் மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைப்பது கடினம் என்பதால், அவர்கள் தமிழகத்தில் போலியான இருப்பிட முகவரி பெற்று விண்ணப்பத்திருக்கலாம் என்று அரசு வழக்கறிஞர் சந்தேகம் எழுப்பியுள்ளார். இதேபோல் மற்ற மாநிலத்தவர்களும் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவைப் பெற்ற சென்னை காவல் ஆணையர், புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன், மருத்துவக் கலந்தாய்வில் கேரளாவைச் சேர்ந்த 9 மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் வழங்கியிருப்பது உறுதியானது. அவர்கள் மீது முறைப்படி புகார் பதியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலி இருப்பிடச் சான்றிதழ் வழங்கும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

நீட் தேர்வு நடத்தப்பட்டதால் தமிழகத்தைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் பலரின் மருத்து கனவில் மண் விழுந்துள்ளது. அப்படியும் கஷ்டப்பட்டு படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கலந்தாய்வில் பல மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த இடத்திற்கும் சிக்கல் ஏற்படுத்தும் வகையில் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் போலி இருப்பிடச்சான்று மூலம் தமிழக மருத்துவக்கல்லூரிக்குள் நுழைய முயற்சி செய்கின்றனர்.

Previous Post

தினகரன், சசிகலா பற்றி தவறான தகவல் பரப்புகிறார்கள்: செந்தில் பாலாஜி

Next Post

அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய உயிருள்ள பெண் பொம்மை!

Next Post

அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய உயிருள்ள பெண் பொம்மை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures