அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த இரு தினங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் டெல்டா, உள்மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.