நடிகர் அதர்வா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ டி என் ஏ’ எனும் திரைப்படம் எதிர்வரும் இருபதாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
‘ஒரு நாள் கூத்து ‘ , ‘ மான்ஸ்டர் ‘ , ‘ஃபர்கானா ‘ என ஃபீல் குட் திரைப்படங்களை வழங்குவதில் தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்திய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ டி என் ஏ ‘ எனும் திரைப்படத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், ரமேஷ் திலக் ,பாலாஜி சக்திவேல் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
பார்த்திபன் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் பாடல்கள், டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திரைப்படம் இம்மாதம் வெளியாகிறது. இதே திகதியில் தனுஷ், நாகார்ஜுனா,ராஷ்மிகா மந்தானா,ஆகிய பான் இந்திய நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கும் ‘குபேரா’ எனும் திரைப்படமும் வெளியாகிறது.
‘குபேரா’ படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு இந்த படத்தின் மீது ரசிகர்களிடத்தில் இல்லை என்றாலும் , இப்படத்தின் இயக்குநர் ஏற்கனவே வெற்றி பெற்ற கவனம் ஈர்த்த படைப்புகளை வழங்கி இருப்பதால் இதற்கு ஓரளவு வரவேற்பு இருக்கும் என அவதானிக்கப்படுகிறது.













