தடை நீங்கும் வரை போராட்டம் தொடரும்! விஜய் சேதுபதி
நாடுமுழுவதும் இன்று ஜல்லிக்கட்டு போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மட்டுமல்ல வெளிநாடுகளிலும் வேலைக்கு செல்லாமல் அங்கு இருக்கும் தமிழர்கள் அனைவரும் இப்போது ஒன்றுகூடி போராட்டத்திற்கு ஆதரவளித்து வருகின்றனர்.
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் போராட்டம் நாட்கணக்கில் தொடந்து நடைபெற்றுவருகிறது.
பிரதமர் மோடி அவசர சட்டம் கொண்டுவரமுடியாது என சொன்ன செய்தியை கேட்டை கேட்டு இளைஞர்கள் கொந்தளித்துள்ளனர்.
இந்நிலையில் திண்டுக்கல் பகுதியில் கருப்பன் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய் சேதுபதி அருகே போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களோடு மணிக்கணக்கில் பேசலாம் என்று வந்தார்.
அனால் கூட்ட நெரிசல், ஆரவாரத்தால் அவரால் சில நிமிடம் மட்டுமே பேச முடிந்தது.
ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கும் அவரை போராட்டம் தொடரும் என அவர் கூறினார்.

