ட்ரம்ப்பை சந்திக்கிறார் ஜஸ்ரின் ரூடோ?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று அடுத்த வாரம் ஆரம்பத்தில் வொஷிங்டன் டி.சியில் நடைபெறலாம் என ட்ரம்ப்பின் ஆலோசகர் நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ கனேடிய பிரதமர் இங்கு வருகின்றார் என்பதை கூறுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். மிக விரைவில் அவர் இங்கு வருகை தருவார். ஜனதிபதி ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஒட்டாவா பிரதமர் அலுவலகம் ஜஸ்ரின் ரூடோவின் விஜயம் குறித்து எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.