ட்ரம்பின் அதிரடியில் சிக்கியது பாகிஸ்தான்?
அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றப்பிறகு, முதன்முதலில் கையெழுத்திட்டது அண்டை நாடான கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தடுப்புச்சுவர் கட்டுவதுதான். இந்த தடுப்புச்சுவர் கையெழுத்தால் உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
இந்நிலையில், ஈரான், ஈராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் மற்றும் சிரியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அகதிகளாகவும், பயணிகளாகவும் வருவோருக்கு வழங்கி வரும் 90 நாட்கள் விசாவுக்கு அதிபர் ட்ரம்ப் அரசு தடை விதித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, இந்த பட்டியலில் இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் நாட்டையும் சேர்க்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.