டோக்கியோ ஒலிம்பிக்கின் அணுசரனையாளராக இருக்கும் ஜப்பானின் மிகப்பெரிய செய்தித்தாள்களில் ஒன்று, இவ் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு எதிர்ப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது.
2020 டேக்கியோ விளையாட்டுகளின் இணையத்தள உத்தியோபூர்வ பங்காளியாக பட்டியலிடப்பட்டுள்ள ஆசாஹி ஷிம்பன் என்ற செய்தித்தாளே போட்டிகளுக்கு எதிரான குரலுக்கு தனது ஆதரவினை வழங்கியுள்ளது.
அது மாத்திரமல்லாது ஜப்பானின் பிரதரம் ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நிறுத்துமாறும் கேட்டுக் கொண்டது.
உலகெங்கிலும் தொற்றுநோய் இன்னும் அதிகமாக இருப்பதால், ஜப்பானில் வணிகத் தலைவர்களும் டோக்கியோ விளையாட்டுகளை நடத்துவதற்கு எதிராக தற்சமயம் குரல் கொடுத்துள்ளனர்.
அமெரிக்கான் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் தரவுகளின்படி, ஜப்பானில் கடந்த வாரத்தில் 32,509 புதிய கொவிட் நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அது சம்பந்தமாக 654 புதிய இறப்புகளும் சம்பவித்துள்ளன.
தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து, ஜப்பானில் மொத்தம் 726,586 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 12,457 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.