இரட்டை இலை சின்னத்தை பெற வேண்டும் என்பதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் டெல்லி பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து டி.டி.வி தினகரனை டெல்லி பொலிசார் அவரது அடையாறு இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த தகவலை அறிந்த ஊடகத்தினர் பலர் தினகரன் வீட்டின் முன்பு குவிந்தனர்.
தினகரனிடம் தீவிர விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அவரது வீட்டு உள்வாசலில் நின்றபடி ஊடகத்தினரையும், வீட்டு முன்பு குவிந்திருந்தவர்களையும் தொடர்ச்சியாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார் ஒரு பெண்.
அங்கிருந்த செய்தியாளர்களும், புகைப்படக்காரர்களும் இதை கவனித்துக்கொண்டிருந்தனர்.
பிறகுதான் தெரியவந்தது கேமராவுடன் படம் பிடித்துக்கொண்டிருந்த அந்த பெண் தினகரனின் மகள் என்பது